திரையுலகை நட்சத்திரங்களை போல் அச்சு அசல் அப்படியே இருக்கும் சில நபர்களை நாம் பார்த்து இருக்கிறோம். சில சமயம் அவர்களை பார்க்கும் போது நாம் அதிர்ச்சியிலும், வியப்பிலும் ஆழ்ந்துவிடுவோம்
AI டெக்னாலஜி
சமீபகாலமாக AI டெக்னாலஜி மிகவும் பிரபலமாகி வருகிறது. குறிப்பாக நட்சத்திரங்களின் முகத்தை AI பயன்படுத்தி வேறொருவரின் முகத்தில் பொருத்தி அந்த வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.
சிலர் இதை தவறான முறையில் பயன்படுத்தியதை கூட சமீபத்தில் பார்த்தோம். ராஷ்மிகா மந்தனா, கஜோல் போன்ற நடிகைகளின் முகத்தை வைத்து தவறான முறையில் சிலர் AI டெக்னாலஜியை கையாண்டனர். இதற்கு பலரும் தங்களுடைய எதிர்ப்புகளையும் தெரிவித்து இருந்தனர்.
வியப்பில் ஆழ்த்தி இளைஞர்
இந்நிலையில், இளைஞர் ஒருவர் AI டெக்னாலஜியை பயன்படுத்தி அச்சு அசல் அப்படியே எம்.ஜி.ஆர் போலவே மாறி நடித்து அசத்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ.
MGR 2.0 💥
— Christopher Kanagaraj (@Chrissuccess) November 29, 2023