லியோ
இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த திரைப்படங்களில் ஒன்று லியோ. லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் உருவான இப்படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் மூலம் லலித் குமார் தயாரித்து இருந்தார்.
கிட்டதட்ட ரூ. 600 கோடி வரை வசூல் செய்துள்ள லியோ படத்தின் மூலம் தயாரிப்பாளர் லலித் குமாருக்கு ரூ. 99 கோடி வரை லாபம் கிடைத்துள்ளதாம்.
சம்பளம் பாக்கி
இந்நிலையில், லோகேஷ் கனகராஜுக்கு சம்பளம் பாக்கி இருப்பதாக ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. கிட்டதட்ட ரூ. 5 கோடி வரை லோகேஷ் கனகராஜுக்கு சம்பளம் பாக்கி என்பது போல் தெரிவிக்கின்றனர்.
ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை. ஏனென்றால் தயாரிப்பாளர் லலித் குமாருடன் நெருக்கமாக தான் லோகேஷ் பழகி வருகிறார்.
சமீபத்தில் கூட லலித் குமார் மகனின் திருமணத்தில் கூட மகிழ்ச்சியுடன் லோகேஷ் கலந்துகொண்டார். இதனால் சம்பளம் பாக்கி என்று வரும் தகவல் உண்மையாக இருக்க பெரிதும் வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது.