அஜித்தின் 64 படத்தை இயக்கப்போகும் சென்சேஷனல் இயக்குனர்!..

அஜித் குமார்
தற்போது நடிகர் அஜித் குமார் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் முதற்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் முடிந்த நிலையில் அடுப்படியாக துபாயில் எடுக்க போவதாக கூறப்படுகிறது.

இப்படத்தை அடுத்து அஜித் குமார் மார்க் ஆண்டனி படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் கூட்டணி வைத்து இருப்பதாக சினிமா வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

எதிர்பார்க்காத கூட்டணி
இந்நிலையில் அஜித்தின் 64 படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் RS Infotainment தயாரிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.