நடிகர் அஜித்
நடிகர் அஜித், படங்களுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறாரோ அதே அளவிற்கு தனது கனவிற்கான பயணத்தையும் தொடர்ந்து செய்து வருகிறார்.
இப்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிக்க விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.
அனிருத் இசையமைக்க ஹாலிவுட் தரத்தில் உருவாக்கப்படவுள்ளதால் படப்பிடிப்பு முழுவதும் அஜர்பைஜான் நாட்டிலேயே நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 24ம் தேதி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததால் சிறிய இடைவேளை விடப்பட்டுள்ளது.
அடுத்தடுத்த படங்கள்
இந்த படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் யாருடன் இணைவார் என ரசிகர்களிடம் நிறைய பேச்சு எழுந்து வருகிறது.
இந்த நேரத்தில் தான் அஜித்தின் அடுத்தடுத்த பட இயக்குனர்களின் விவரம் ஒன்று வைரலாகி வருகிறது.
மகிழ்திருமேனி படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன், வெற்றிமாறன், விஷ்ணுவர்தன் போன்ற இயக்குனர்களுடன் அஜித் கூட்டணி அமைக்க இருப்பதாக கூறப்படுகிறது.