மன்சூர் அலிகானின் சர்ச்சை கருத்து!! திர்ஷாவிற்கு காவல்துறை கடிதம்

திரிஷா – மன்சூர் அலிகான்
நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசிய சர்ச்சை கருத்துக்கள் கடந்த சில தினங்களாக பரபரப்பாகி வந்தது.

இதனை அடுத்து மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. நேற்று மன்சூர் அலிகான் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

அதன் பின் மன்சூர் அலிகான், திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதற்கு திரிஷா, தவறு செய்வது மனித இயல்பு, மன்னிப்பதே புனிதம் என்று பதில் அளித்தார்.

காவல்துறை கடிதம்
இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சை வகையில் பேசிய விவகாரம் குறித்து திரிஷா தரப்பிடம் விளக்கம் கேட்டு ஆயிரம் விளக்கு மகளிர் காவல்துறை கடிதம் அனுப்பியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்கவேண்டும் என்றும் நடிகை திரிஷாவுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.