நடிகர் பிரகாஷ் ராஜின் வாழ்க்கை வரலாறு!

பிரகாஷ் ராஜ்
நடிகர், இயக்குநர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் எனப் பல பன்முகங்களை கொண்டவர் தான் பிரகாஷ் ராஜ்.

இவர் காஞ்சிவரம் என்ற தமிழ் திரைப்படத்திற்காக 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை பெற்றுள்ளார்.

பிறப்பு
பிரகாஷ் ராஜ், கடந்த 1965 -ம் ஆண்டு 26 மார்ச் மாதம் பெங்களூரில்பிறந்தார். இவரது சகோதரர் பிரசாத் ராஜ் அவரும் ஒரு நடிகர் ஆவார்.

பிரகாஷ் ராஜ் தனது பள்ளிப்படிப்பை புனித ஜோசப் இந்திய உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். அதனை அடுத்து தனது உயர் நிலைப்படிப்பை பெங்களூரில் உள்ள புனித ஜோசப் வணிகக் கல்லூரியில் பயின்றார்.

சினிமா வாழ்க்கை
தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கன்னடத் தொடர்களில் நடித்து வந்த பிரகாஷ் ராஜ், அதன் வழியே கன்னடத் திரைப்படங்களிலும் நடிக்கத் தொடங்கினார்.

இதைத்தொடர்ந்து இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கத்தில் கடந்த 1994 -ம் ஆண்டு வெளியான டூயட் என்ற படத்தின் மூலம் பிரகாஷ்ராஜை கோலிவுட்டில் அறிமுகப்படுத்தினார்.

இந்த படத்திற்கு பிறகு பிரகாஷ் ராஜ்க்கு தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குவித்தன.

குடும்பம்
பிரகாஷ் ராஜ் 1994 ஆம் ஆண்டு நடிகை லலிதா குமாரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு மேகனா மற்றும் பூஜா என்ற இரண்டு மகள்களும், சித்து என்ற மகனும் உள்ளார். ஆனால் சில தனிப்பட்ட காரணத்தால் பிரகாஷ் ராஜ் லிதா குமாரியை கடந்த 2009 ம் ஆண்டு விவாகரத்து செய்தார்.

அதன் பின் சில வருடங்களிலேயே பிரகாஷ் ராஜ் நடன இயக்குனர் போனி வர்மாவை மணந்தார். இருவருக்கும் வேதாந்த் என்ற மகன் உள்ளார்.