பொதுவாகவே முறையான கூந்தல் பராமரிப்பு இல்லாத காரணத்தினால் பலர் பொடுகு பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றார்கள். அதுவும் குளிர் காலம் என்றால் சொல்லவே வேண்டாம். குளிர்காலத்தில் கூந்தல் வரட்சி மற்றும் பொடுகு தொல்லை அதிகமாகிவிடுவது வழக்கம்.
எனவே, குளிர்காலத்தில் ஏற்படும் பொடுகு பிரச்சனையை தடுக்க கூந்தலை எவ்வாறு முறையாக பராமரிக்க வேண்டும் என்பது தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
பொடுகு தொல்லையால் அவதிப்படுகிறீர்கள் என்றால், உங்கள் தலைக்கு தேங்காய் எண்ணையை பயன்படுத்துவதற்கு முன், அதை சிறிது சூடாக்கி, மிதமான சூட்டில் தலையில் பயன்படுத்தவும். மற்றொரு வழி என்னவென்றால், தேங்காய் எண்ணெயில் சிறிதளவு எலும்பிச்சை சாறு கலந்து தலைக்கு தடவி வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
தோல் வறட்சி மற்றும் தொற்று காரணமாக சிலருக்கு பொடுகு பிரச்சனைகள் வரும். இதற்கு ஒரே வழி என்னவென்றால், பாதாம் எண்ணெயுடன் சில துளிகள் தேயிலை மர எண்ணெயை கலந்து தலையில் தடவினால் பொடுகு பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு கிடைக்கும்.
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே பொடுகை வேறோடு அழிக்க இப்படி செய்தால் போதும். கற்றாழை ஜெல்லுடன் வேப்ப இலை பொடி அல்லது வேப்பிலை பேஸ்ட்டை கலந்து தலையில் தடவவும்.
30 நிமிடங்களுக்குப் பிறகு, ஷாம்பூ பயன்படுத்தி குளிக்கவும். குறிப்பாக, பொடுகு எதிர்ப்பு ஷாம்பு பயன்படுத்துவது நல்ல பலனை கொடுக்கும்