ஸ்ரீதேவி மகள்
இந்திய சினிமா கொண்டாடிய நடிகைகளில் ஒருவர் ஸ்ரீதேவி. இவர் துபாயில் உறவினர் திருமணத்தில் சென்றபோது ஹோட்டல் அறையில் இறந்துள்ளார். அவரது மரண செய்தியை இப்போதும் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
அவர் இறந்த போது ஸ்ரீதேவியின் மூத்த மகள் அப்போது தான் சினிமாவில் அறிமுகமாக ஒரு படத்தில் நாயகியாக நடித்து வந்துள்ளார்.
2018ம் ஆண்டு ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கரண் ஜோஹரின் தடக் படம் மூலம் அறிமுகமாகி இப்போது என்.டி.ஆர் படம் மூலம் தென்னிந்திய சினிமாவிலும் நுழைந்துள்ளார்.
படங்களை தாண்டி நிறைய போட்டோ ஷுட்கள், விளம்பரங்கள் என பிஸியாக இருக்கும் ஜான்வி கபூரின் சொத்து மதிப்பு 2022ம் ஆண்டு விவரப்படி சுமார் ரூ. 58 முதல் ரூ. 65 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
ஜான்வி ஒரு படத்திற்கு தனது நடிப்புக்கான கட்டணமாக சுமார் 5 கோடி ரூபாய் முதல் 8 கோடி வரை வாங்குகிறார்.