வெள்ளத்தில் சிக்கிய அமீர்கான்

மழை வெள்ளம்
மிக்ஜாம் புயலால் சென்னை மக்கள் இயல்பு வாழ்க்கையில் இருந்து மோசமாக நிலையில் உள்ளார்கள். எங்கு பார்த்தாலும் மழை நீர், ஒரு நபர் மூழ்கும் அளவிற்கு தண்ணீர், பலர் வீடுகளை இழந்து ரோட்டில் வசிக்கிறார்கள்.

சென்னை மாநகராட்சியும் உதவி கேட்கும் அனைவருக்கும் நேரில் சென்று உடனுக்குடன் உதவி வருகிறார்கள்.

அப்படி காரபாக்கத்தில் நடிகர் விஷ்ணு மாட்டிக்கொண்டதாக டுவிட் செய்திருந்தார். அவர் தண்ணீரில் சிக்கியது மாநகராட்சிக்கு தெரியவர உடனே சென்று உதவியுள்ளனர். விஷ்ணுவுடன் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அமீர்கானும் காப்பாற்றப்பட்டுள்ளார்.

எங்களை காப்பாற்ற யாரும் இல்லை என பதிவு செய்த விஷ்ணு, உடனே எங்களை மாநகராட்சி வெள்ளத்தில் இருந்து காப்பாற்றிவிட்டார்கள் என மீண்டும் டுவிட் செய்து அவர்களுக்கு நன்றி கூறியுள்ளார்.