ரோபோ ஷங்கர்
சென்னையே மிக்ஜாம் புயலால பாதிக்கப்பட்டு வருகிறது. புயல் காரணமாக சென்னையில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி இருக்கின்றன.
இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாமல் பொதுமக்கள் வீட்டில் தத்தளித்து வருகின்றனர், சினிமா பிரபலங்களும் தங்களது நிலை என்ன என்று வீடியோ வெளியிட்டு வருகிறார்கள்.
நடிகரின் தகவல்
நடிகர் ரோபோ ஷங்கர் தனது வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க கடைக்கு சென்றபோது வெள்ளத்தில் சிக்கி காயமடைந்ததாக வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
மளிகை சாமான், பால் போன்றவற்றை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள், பத்திரமாக இருங்கள் என வீடியோ வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram