ஹீரோவாக நடிக்கும் பாக்கியலச்சுமி சீரியல் நடிகையின் மகன்

பாக்கியலட்சுமி சீரியல்
விஜய் தொலைக்காட்சியின் ஹிட் தொடராக ஓடிக் கொண்டிருக்கிறது பாக்கியலட்சுமி சீரியல்.

கதையில் பாக்கியா வீட்டில் இருந்துகொண்டு அவருக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருக்கிறார் கோபி. அவர் சொல்வதை எல்லாம் கேட்டு அவரது அம்மாவும் பாக்கியாவை எப்போதும் திட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.

இப்போது பாக்கியா எதிர்ப்பார்த்த பெரிய ஆர்டர் கைக்கு வர இப்போது அந்த மகிழ்ச்சியில் உள்ளார். இந்த வாரம் சமையல் காண்டிராக்ட் காட்சிகளோடு முடிந்துவிடும் என தெரிகிறது.

நடிகையின் மகன்
இந்த தொடரில் ஒரு சமயம் நல்ல கதாபாத்திரமாகவும் பல நேரங்களில் வில்லியாகவும் ரசிகர்களால் பார்க்கப்படுபவர் கோபியின் தாய் ஈஸ்வரி. இவரது மகன் தான் இப்போது சினிமாவில் நாயகனாக அறிமுகமாகி இருக்கிறாராம்.

படத்தின் முதல் நாளின் போது பாக்கியலட்சுமி சீரியல் குழுவினர் சென்று பார்த்துள்ளனர்.. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை கம்பம் மீனா தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.