நடிகர் சூரியின் முழு சொத்து மதிப்பு விவரம்

நடிகர் சூரி
சினிமா ஆசையோடு பல ஊர்களில் இருந்து சென்னை வந்து கஷ்டப்பட்டு வாய்ப்புகள் பெற்று ஜெயித்து பிரபலங்கள் பலர் உள்ளார்கள். அவர்களில் ஒருவர் தான் நடிகர் சூரி. ஆரம்ப கட்டத்தில் சாப்பிட கூட காசு இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டுள்ளார்.

விடாமுயற்சியாக வாய்ப்புகள் தேடிவந்த சூரிக்கு வெண்ணிலா கபடிக்குழு படம் தான் அவரது ஆசைக்கு பாதையாக அமைந்தது.

அந்த படத்தில் நடித்த புரோட்டா காமெடி காட்சி அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளை தேடித் தந்தது. பின் நடிக்கும் படங்கள் எல்லாம் வெற்றியை தேடித்தர முன்னணி காமெடியன் என்ற அளவிற்கு வளர்ந்தார்.

இப்போது காமெடி நடிகர் என்பதை தாண்டி விடுதலை படத்தின் மூலம் சூரியை நாயகனாக நடிக்க வைத்து கலக்கியுள்ளார் இயக்குனர் வெற்றிமாறன்.

சொத்து மதிப்பு
நடிகர் சூரிக்கு சொந்தமாக மதுரை மட்டும் சென்னையில் 2 வீடுகள் உள்ளன, இதுதவிர சென்னையில் பல பகுதிகளில் ரியல் எஸ்டேட்டிலும் பல கோடிகளை முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இவருக்கு BMW உள்பட சொந்தமாக 3 சொகுசு கார்கள் உள்ளன.

தனது சொந்த ஊரான மதுரையில் அம்மன் என்கிற பெயரில் ஹோட்டல் ஒன்றை வைத்துள்ளார். படத்துக்கு படம் தனது சம்பளத்தை உயர்த்தி வரும் சூரியின் சொத்து மதிப்பு ரூ. 50 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.