கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக ரசிகர்கள் மத்தியில் பரிட்சயம் ஆனவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜனனி.
தொகுப்பாளினியான ஜனனி விஜய் டிவியில் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் விஜய்யின் லியோ படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் சில காட்சிகளில் ஜனனி நடித்திருந்தார். அதோடு சோஷியல் மீடியாவில் அவ்வப்போது ரசிகர்களை கவரும் விதமாக போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் ஜனனி தற்போது வெளியிட்டுள்ள க்யூட் போட்டோஸ் ஹார்டின்களை குவித்து வருகிறது.