பாடசாலை ஒன்றின் மனையியல் பாட வேளையயில் தயாரிக்கப்பட்ட உணவை உட்கொண்ட 12 மாணவர்கள் திடீர் உடல் அரிப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கம்பஹா – மீரிகம, வெவல்தெனிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் தரம் 6 இல் கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாறு சுகயீனமடைந்துள்ளனர்.
மாணவர்கள் மீரிகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பாடசாலையில் மனையியல் பாட நேரத்தில் உணவொன்றை தயாரித்திருந்ததாகவும் அதை உட்கொண்ட பின்னர் உடல் முழுவதும் அரிக்க ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெவல்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.