ஜீன்ஸ் படத்தில் முதலில் நடிக்க இருந்த டாப் ஹீரோ யார் தெரியுமா?

1998ல் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்து பெரிய ஹிட் ஆன படம் ஜீன்ஸ். 25 வருடங்கள் கழித்தும் தற்போது அந்த படம் ரசிகர்கள் அதிகம் ரசிக்கும் ஒன்றாக இருந்து வருகிறது. பெரிய செலவு செய்து எடுக்கப்பட்ட பாடல்கள், ஏ.ஆர்.ரஹ்மானின் மியூசிக், கிராபிக்ஸ் காட்சிகள் என பல விஷயங்கள் பற்றி ரசிகர்கள் தற்போதும் பிரமிப்பாக பேசுகின்றனர்.

அந்த படத்தின் பிரஷாந்த் இரட்டை வேடங்களில் நடித்து இருப்பார். ஐஸ்வர்யா ராய் ஒருவர் தான் என்றாலும், கதைப்படி அவர் ட்வின்ஸ் ஆக நடிப்பார்.

மிஸ் செய்த டாப் ஹீரோ
ஜீன்ஸ் படத்தில் முதலில் நடிகர் அப்பாஸை தான் ஷங்கர் அணுகி இருக்கிறார். ஆனால் அவர் கமிட்மென்ட் கொடுக்காததால் அடுத்து அஜித்தை நடிக்க வைக்கலாம் என ஷங்கர் திட்டமிட்டாராம். ஆனால் அஜித்துக்கும் அந்த நேரத்தில் கால் சீட் ஃபுல் என்பதால், அடுத்து தான் பிரசாந்தை ஷங்கர் அணுகி இருக்கிறார்.

அவர் ஒப்புக்கொண்டதால் ஷங்கர் அவரை வைத்து ஜீன்ஸ் மூலம் பெரிய் ஹிட் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.