பிரபு மகளை கரம்பிடிக்க போகும் ஆதிக் ரவிச்சந்திரன்

ஆதிக் ரவிச்சந்திரன்
இந்த ஆண்டு வெளிவந்து உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்த திரைப்படங்களில் ஒன்று மார்க் ஆண்டனி. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார்.

மாபெரும் வெற்றியடைந்த இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தை வைத்து படம் இயக்கப்போவதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுவரை இதுகுறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை.

நடிகர் பிரபுவின் மகளை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் திருமணம் செய்ய போவதாக சில தினங்களுக்கு முன் தகவல் வெளிவந்தது.

திருமணம்
இந்நிலையில், வருகிற 13ஆம் தேதி விமர்சையாக இவர்களுடைய திருமணம் நடைபெற உள்ளது. ஆம், இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடந்து வருகிறதாம். மொத்தம் 300 நபர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மாப்பிள்ளை வீட்டிலிருந்து 150 பேரும், பெண் வீட்டிலிருந்து 150 பேரும் மட்டுமே கலந்துகொள்ள போகிறார்களாம். அஜித்தின் அடுத்த படத்தை இயக்கவுள்ள ஆதிக் ரவிச்சந்திரனின் திருமணத்தில் அஜித் கலந்துகொள்வாரா என கேள்வி எழுந்துள்ளது.

அதே போல் பிரபு வீட்டாருடன் நெருங்கிய பழக கூடிய நபர்களில் ஒருவர் அஜித். இதனால் அவர் திருமணத்தில் கலந்துகொள்ள வாய்ப்பு இருக்கிறது என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், நேற்று தான் தன்னுடைய விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பிற்காக அசர்பைஜான் புறப்பட்டு சென்றார் அஜித். ஆகையால் 13ஆம் தேதி மீண்டும் அவர் சென்னைக்கு வர வாய்ப்பு இல்லை என தெரிகிறது.

படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பும் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் பிரபு மகளை அழைத்து விருந்து கொடுப்பார் என கூறப்படுகிறது.