ஜெயிலர் வசூலை முறியடித்த அனிமல்.

அனிமல்
ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்து சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் அனிமல். இப்படத்தை இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியிருந்தார்.

இவர் இயக்கத்தில் ஏற்கனவே அர்ஜுன் ரெட்டி எனும் திரைப்படம் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. படுமோசமான விமர்சனங்கள் அனிமல் படத்தின் மீது இருந்தாலும் கூட வசூலில் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சாதனை படைத்து வருகிறது.

பாக்ஸ் ஆபிஸ் சாதனை
இந்நிலையில், இதுவரை இப்படம் திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அனிமல் உலகளவில் ரூ. 650 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.

ரூ. 650 கோடி வசூல் செய்தது மூலம் இந்த ஆண்டு இந்தியளவில் அதிகம் வசூல் செய்த ஜெயிலர் படத்தின் மொத்த வசூல் சாதனையையும் அனிமல் முறியடித்துள்ளது.

ஆம், ஜெயிலர் படத்தின் மொத்த வசூல் ரூ. 635 கோடி மட்டுமே. ரூ. 650 கோடிக்கும் மேல் வசூல் செய்து உலகளவில் வசூல் ரீதியாக மட்டுமே ஜெயிலர் படத்தை முந்திவிட்டது அனிமல்.