விசா விண்ணப்பங்கள் தொடர்பில் புதிய நடைமுறை!

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளும் வெளிநாட்டவர்களுக்கான விசா விண்ணப்பங்களை இணையவழி மூலமாக விண்ணப்பிக்க புதிய நடைமுறையை அரசாங்கம் அறிமுகம் செய்யவுள்ளது.

விசா விண்ணப்பங்களை இணையவழி மூலமாக விண்ணப்பிப்பதற்காக அதிகாரமளிக்கப்பட்ட முகவர் ஒருவரை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்காக ஜி.பி.எஸ். தொழில்நுட்ப சேவை மற்றும் ஐ.வி.எஸ். க்ளோபல், வி.எப்.எஸ். உள்ளிட்ட நிறுவனங்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆலோசனைகள் குறித்து பரிசீலிக்கப்பட்டுள்ளன.

ஒன்லைன் விசா
முகவர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நியமிக்கப்பட்டுள்ள மதிப்பீட்டுக் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையின் பரிந்துரைகளுக்கமைய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், சட்டமா அதிபரின் அவதானிப்புகளுக்கமைய வரைவாக்கம் செய்யப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.