பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் தொலைக்காட்சியில் 5 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடிய ஒரு தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
என்ன தான் பிரச்சனை வந்தாலும் அண்ணன்-தம்பிகள் ஒன்றாகவே இருக்க வேண்டும், அப்படி இருந்தால் தான் கூட்டுக்குடும்பம் என ஓடியது இந்த தொடர்.
சமீபத்தில் இந்த தொடர் குழுவினர் அனைவரும் கோவிலில் ஒன்றாக நிற்க கடைசி காட்சியாக முடிவடைந்தது.
இந்த தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் முதலில் நடித்து வந்தவர் சித்ரா, அவர் திடீரென தற்கொலை செய்துகொண்டு இறக்க அவருக்கு பதிலாக காவ்யா என்பவர் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
பின் அவரும் திரைப்பட வாய்ப்புகளால் சீரியலில் இருந்து வெளியேற லாவண்யா என்பவர் நடித்தார்.
காதல் பிரேக் அப்
இந்த நிலையில் நடிகை லாவண்யா அண்மையில் ஒரு பேட்டியில் காதல் பிரேக் அப் குறித்து பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர், நான் வங்கி ஒன்றில் பணிபுரிந்தபோது நான் செய்த அனைத்து விஷயங்களும் எனது காதலனுக்கு பிடித்திருந்தது.
ஆனால் மாடலிங் துறையில் நுழைந்தது அவருக்கு பிடிக்கவில்லை, அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது, எனது வாழ்க்கையில் நான் அடுத்த கட்டத்திற்கு போக அந்த காதல் தடையாக இருந்ததால் பிரேக்அப் செய்தேன் என கூறியுள்ளார்.