நடிகர் கவின் ஸ்டார் படத்தின் முதல் சிங்கிள்- வீடியோ இதோ

நடிகர் கவின்
சரவணன்-மீனாட்சி என்ற தொடர் மூலம் தமிழக மக்களின் கவனத்திற்கு வந்தவர் தான் கவின்.

அந்த தொடருக்கு பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் வைரலாக பேசப்பட்டு பிரபலமும் ஆனார். தற்போது பிஸியாக நடித்துவரும் ஒரு இளம் நாயகனாக சினிமாவில் ஜொலித்து வருகிறார்.

இந்த ஆண்டு கவின் நடிப்பில் வெளிவந்த டாடா திரைப்படம் சூப்பர் டூப்பர் பிளாக் பஸ்டர் படமாக அமைந்தது. இப்பட வெற்றிக்கு பிறகு பட வாய்ப்புகளாக கவினுக்கு குவிந்து வருகிறது.

பியார் பிரேமா காதல் பட புகழ் இயக்குனர் இளன் ஸ்டார் என்ற பெயரில் கவினை வைத்து படம் இயக்கியுள்ளார்.

கவின் – இளன் கூட்டணியில் உருவாகும் ஸ்டார் படத்தில் அதிதி போஹன்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் ஆகிய மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.

ஃபஸ்ட் சிங்கிள்
யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது. சூப்பர்ஸ்டாரின் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக இப்பாடலை வெளியிட்டு உள்ளனர்.