அஜித்தின் விடாமுயற்சி பட கதை இதுதான்

விடாமுயற்சி
விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் அஜர்பைஜான் நாட்டில் தொடங்கி, தற்போதுவரை அங்கு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும் முக்கியமான ரோலில் அர்ஜுன், பிரியா பவானி ஷங்கர், ரெஜினா என்ப பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

கதை
இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் கதை குறித்து தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால், படத்தில் அஜித்தும் திரிஷாவும் கணவன் மனைவியாக வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்கிறார்.

அப்போது திரிஷா காணாமல் போகிறார். வில்லன் குரூப்பில் மாட்டிக்கொள்கிறார். கடைசியில் திரிஷாவை அஜித் முயற்சி செய்து கண்டுபித்தாரா என்பதை விடாமுயற்சி படத்தின் கதை என்று பிரபல சினிமா பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.