ஜப்பானுக்கு சொந்தமான ஹகோடேட் தீவு பிரபல சுற்றுலா தலமாக விளங்குகிறது.இங்கு திடீரென ஏராளமான மீன்கள் செத்து கரை ஒதுங்கின.
இதனையறிந்த மக்கள் அந்த மீன்களை சேகரித்து விற்பனை செய்ய தொடங்கிய நிலையில், நேரம் செல்லச்செல்ல லட்சக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன.
புகுஷிமா அணுமின் நிலையத்தின் கதிரியக்க கழிவுகள்
இந்த நிலையில் புகுஷிமா அணுமின் நிலையத்தின் கதிரியக்க கழிவுகள் கலந்ததால் மீன்கள் இறந்ததாக கூறப்பட்டது. இதன் காரணமாக அந்த மீன்களை சாப்பிட வேண்டாம் என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்தது.
இதற்கிடையே மீன்கள் இறந்தது குறித்து விசாரணை நடத்துவதற்காக அங்கு ஆராய்ச்சியாளர்கள் அனுப்பப்பட்டதாகவும் அவர்கள் அங்கிருந்து மாதிரிகளை சேகரித்து சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அதன் முடிவு வெளிவந்த பின்னரே மீன்கள் இறந்ததற்கான உண்மையான காரணம் தெரிய வரும் என ஜப்பான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.