பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிக்காக தனது குடும்பத்துடன் யாழ்பாணம் வந்துள்ள நடிகை ரம்பா மற்றும், கணவர் , பிள்ளைகள், ReeCha வில் தங்கியுள்ளனர்.
பாடகர் ஹரிஹரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி
எதிர்வரும் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளி அரங்கில் பிரபல தென்னிந்திய பிரபல பாடகர் ஹரிஹரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி இடம்பெறவுள்ளது. northern Uniயின் ஏற்பாட்டில் இடம்பெற்வுள்ள இந்த இசை நிகழ்ச்சியானது.
ஐபிசி தமிழ் மற்றும் லங்காசிறி ஊடகத்தின் பிரதான அனுசரணையுடன், முற்றிலும் இலவசமாக நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் தென்னிந்திய பாடகர்கள், நடிகர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் உள்ளிட்ட பல பிரபலங்கள் தற்போது இலங்கைக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்
அந்த வகையில், northern Uniயின் உரிமையாளரான இந்திரனும் அவரது, மனைவி நடிகை ரம்பாவும் தற்போது இலங்கைக்கு வருகை தந்துள்ள நிலையில் அவர்கள் கிளிநொச்சி – இயக்கச்சியிலுள்ள றீ(ச்)ஷா பண்ணையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, வடக்கில், புலம்பெயர் தமிழரின் புதிய முயற்சியாக ஆரம்பிக்கப்பட்டு இன்று தமிழர் தாயகத்தில் ஒரு சிறந்த சுற்றுலாத் தளமாக மாறியிருக்கும் றீ(ச்)ஷாவை பார்வையிட நாளாந்தம் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.