எதிர்நீச்சல் சீரியல் நடிகை பிரியதர்ஷினிக்கு இவ்வளவு பெரிய மகன் உள்ளாரா?

எதிர்நீச்சல்
தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர்களி ஒன்று எதிர்நீச்சல். திருச்செல்வம் அவர்கள் கோலங்கள் தொடருக்கு பிறகு எழுத வரும் அழகான இந்த தொடர் பெண்களை மையப்படுத்தி தான் உள்ளது,

ஆணாதிக்கம், பெண் அடிமை போன்ற எண்ணம் கொண்ட குணசேகரன் என்பவரின் வீட்டில் உள்ள பெண்களை சுற்றிய இந்த தொடர் ஒளிபரப்பாகிறது.

விறுவிறுப்பின் உச்சமாக செல்லும் இந்த கதையில் இப்போது கதிரை தெரியாத நபர்கள் அடிக்க தற்போது அவர் மருத்துவமனையில் நிறைய காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை காண தான் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

நடிகையின் மகன்
இந்த தொடரில் ரேணுகா என்ற கதாபர்த்திரத்தில் நடித்து வருபவர் நடிகை பிரியதர்ஷினி. இவரின் ரேணுகா கதாபாத்திரத்திற்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது என்று தான் கூற வேண்டும்.

இன்று இவருக்கு திருமண நாளாம், தனது அக்காவிற்கு வாழ்த்து கூற பிரியதர்ஷினி குடும்ப புகைப்படத்துடன் தொகுப்பாளினி டிடி பதிவு செய்துள்ளார். அதில் பிரியதர்ஷினி மகனை கண்ட ரசிகர்கள் உங்களுக்கு இவ்வளவு பெரிய மகனா என கமெண்ட் செய்கிறார்கள்.