பிரபல நடிகர் சங்கரன் காலமானார்!

ரா.சங்கரன்
கடந்த 1974-ஆம் ஆண்டு ‘ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு’ என்கிற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் ரா.சங்கரன்.

இவர் திரைப்பட இயக்குனர் என்பதை தாண்டி பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

குறிப்பாக மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த மௌனம் ராகம் படத்தில் ரேவதிக்கு அப்பாவாக சந்திரமௌலி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த படத்தில் நாயகன் கார்த்திக் ‘மிஸ்டர் சந்திரமௌலி’ என்று கூப்பிடும் வசனம் பிரபலம்.

மறைவு
கடந்த சில வருடங்களாக, வயது மூப்பு காரணமாக சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்த ரா.சங்கரன், இன்று தன்னுடைய 92 வயதில் காலமானார். தற்போது இந்த தகவல் திரையுலகை சேர்ந்த பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.