வெட்டிக் கொல்லப்பட்ட பெண்!

கஹவத்த பிரதேசத்தில் வீடொன்றில் பெண்ணொருவர் வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் 71 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்ணும் அவரது மகளும் அந்த வீட்டில் வசித்து வந்தது தற்போது தெரியவந்துள்ளது.

பொலிஸார் மேலதிக விசாரணை
மகள் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது வீட்டின் பின்புறம் உயிரிழந்து கிடந்த தாயை அவதானித்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் கஹவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.