பண மோசடியில் ஈடுபட்ட வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ருமேனியாவில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி 05 இலட்சம் ரூபா மோசடியில் குறித்த அதிகாரி ஈடுபட்டதாக , வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்வதற்கான விசாரணைகள்
சந்தேகநபர் இ நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜர்படுத்தியதை அடுத்து, 5 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணையிலும் 10,000 ரூபா பெறுமதியான பிணையிலும் விடுவிக்க உத்தரவிடப்பட்டது.
அதேவேளை , மோசடியான முறையில் நடத்தப்படும் முகவர் நிலையங்களை சோதனையிட்டு, சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்தது.