அனுராதபுரத்தில மனைவியின் கைகளை கட்டி மிக கொடூரமான முறையில் சித்திரவதை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை நாளை வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கணவரால் தாக்கப்பட்ட பெண் தற்போது அனுராதபுர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கொடூரமாக சித்திரவதை
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் திரிப்பன – உட்டிமடுவ பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் குடிபோதையில் இருந்ததாகவும், மாடு பார்த்துக் கொள்ள வேண்டும் என கூறி மனைவியை கணவர் விகாரை ஒன்றிற்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு அவர் தனது மனைவியின் கைகளை கட்டி வைத்து கொடூரமாக சித்திரவதை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் அவரிடம் இருந்து தப்பிய மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்