சிங்கத்துடன் செல்பி எடுக்க முயன்ற இளைஞனுக்கு நிகழந்த சோகம்!

பாகிஸ்தானில் செல்ஃபி எடுக்க முயன்றபோது சிங்கம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த இளைஞன் சிங்கம் அடைக்கப்பட்டிருந்த கூண்டுக்கு சென்று செல்ஃபி எடுக்க முற்பட்ட வேளையிலேயே குறித்த இளைஞனை சிங்கம் தாக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 வயதான இளைஞரே இவ்வாறு சிங்கத்தால் தாக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.