அண்டார்டிகாவை ஆக்கிரமிக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டுகின்றன.
பூமியின் மிகப்பெரிய பனிப்பகுதி அண்டார்டிகாவாகும்.
இங்கு உலகில் உள்ள மூன்றில் ஒரு சதவீத நன்னீர் இருப்பதாகவும், 500 பில்லியன் டன் இயற்கை வாயுக்கள் இருப்பதாகவும், 500 பில்லியன் டன் கட்சா எண்ணெய் இருப்பதாகவும், மேலும் உரைந்து இருக்கும் பனிகளில் நிலக்கரி, இயற்கை தாதுக்கள், வைரம், தங்கம் போன்ற பல்வேறு வகையான விலை உயர்ந்த தாதுக்கள் இருக்கக்கூடும் என்று அறிவியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் அண்டார்டிகாவை ஆக்கிரமிக்கும் முயற்சி 2ம் உலகப்போருக்கு அதிகரித்தது.
இதனால் அண்டார்டிகாவை பாதுகாக்க 1959 ஆம் ஆண்டு அண்டார்டிகா ஒப்பந்தம் போடப்பட்டது.