போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண் கைது!

போதைப்பொருள் கடத்தல் மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவரை பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இதன்படி, சந்தேகநபர் தொட்டலங்காவில் உள்ள ‘மெத்சண்ட செவன’ வீடமைப்புத் திட்டத்தில் இருந்து இந்த மோசடியை நடத்தி வந்துள்ளார்.

‘காந்தி’ என அடையாளம் காணப்பட்ட 56 வயதுடைய சந்தேகநபர், கைது செய்யப்பட்ட போது 1.5 மில்லியன் பெறுமதியான 100 கிராம் மெத்தாம்பெட்டமைன் (‘ஐஸ்’) போதைப்பொருளை வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்தப் பெண், பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ‘கிம்புலா எல குணா’வின் சகோதரரான ‘சிவா’ என்பவரின் நெருங்கிய கூட்டாளி என்றும் கூறப்படுகிறது.

சந்தேகநபர் வியாழக்கிழமை (டிசம்பர் 19) அளுத்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.