தமிழர் பகுதியில் வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிறைந்து வான் பாய்கின்ற நிலைமை காணப்படுகிறது

முல்லைத்தீவில் கொட்டித்தீர்க்கும் கனமழையால் சற்று முன்னர் திடீரென வந்த வெள்ளம் காரணமாக ஒட்டுசுட்டான் பிரதேசத்தின் புளியங்குளம் பண்டாரவன்னி உள்ளிட்ட கிராம் மக்களின் வீடுகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதனால் பலர் வெள்ளத்தில் சிக்கியுள்ளதுடன் அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகிறது.

இதேவேளை, ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் மாங்குளம், பனிக்கன்குளம், பண்டாரவன்னி, இந்துபுரம், தட்டையர்மலை, புளியங்குளம், தச்சடம்பன் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 127 குடும்பங்களை சேர்ந்த 423 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த மழையால் முல்லைத்தீவில் மொத்தமாக 695 குடும்பங்களை சேர்ந்த 2117 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவின் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.