அதிவேக நெடுஞ்சாலையில் வாகனம் செலுத்தும் போது சாரதிகள் 50 மீற்றர் தூர இடைவெளியை பேணுமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை தவிர்ப்பதற்காகவே இந்த கோரிக்கை வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான எச்சரிக்கை அறிவிப்புகளை இலத்திரனியல் முறையில் காட்சிப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இருண்ட காலநிலை காரணமாக முன்பக்க விளக்குகளை எரிய வைத்து வாகனங்களை சாரதிகள் இயக்குமாறு அதிவேக போக்குவரத்து பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.