தொடர் மழையால் அவதிப்படும் மக்கள்!

நாட்டின் வடக்கு கிழக்கு பகுதிகளில் தொடர் மழையால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில் திருகோணமலை மாவட்டத்தில் இன்று காலையிலிருந்து பெய்துவரும் அடைமழை காரணமாக நகரின் பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணாமலை – கண்டி வீதியில் வெள்ள நீர்
குறிப்பாக திருகோணமலை நகரின் மட்கோ, பள்ளத்தோட்டம், உப்புவெளி, 3ம் கட்டை,அலஸ்தோட்டம், துவரங்காடு, கன்னியா ஆகிய பகுதிகள் வெள்ள நீரினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் திருகோணாமலை – கண்டி பிரதான வீதியிலும் வெள்ள நீர் சடுதியாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதன் காரணமாக வீதியினூடாக போக்குவரத்தினை மேற்கொள்ளும் மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.