இதய நரம்புகளை பலவீனமாக்கும் உணவுகள்

தவறான உணவுப் பழக்கங்களால், இதய நரம்புகள் பலவீனமடையத் தொடங்குகின்றன. இது இதய நோய் அபாயத்தை அதிகரிப்பதோடு, மாரடைப்பு ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கிறது.

இன்றைய காலகட்டத்தில், இளம் வயதிலேயே மாரடைப்பினால் இறப்பவர்கள் எண்ணிக்கை பெரிதும் அதிகரித்துள்ளது.

இதற்கு மிக முக்கிய காரணம் உணவும் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையே, இந்த நிலையில், இதய நரம்புகளை பலவீனமாக்கும் சில உணவுகளை அறிந்து கொண்டு அவற்றை தவிர்ப்பது, ஆரோக்கியத்திற்கு நல்லதுதாகும்.

பாஸ்தா, பேஸ்ட்ரிகள், வெள்ளை ரொட்டி போன்ற பதப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் கொண்ட உணவுகள் சாப்பிட சுவையாக இருந்தாலும், அது உங்கள் இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே, இந்த வகை உணவை அதிகமாக உட்கொள்ள வேண்டாம்.

டிரான்ஸ் ஃபேட் உள்ள உணவை உட்கொள்வதால் உங்கள் இதயத்தின் நரம்புகள் பலவீனமடைகின்றன.

இந்த வகை உணவில் பொரித்த உணவுகள், முக்கியமாக பிரஞ்சு ஃப்ரைஸ், சிப்ஸ், சமோசா போன்றவை அடங்கும். அத்தகைய உணவை நீங்கள் அதிகமாக உட்கொண்டால், கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்து, இதய ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும்.

குளிர் பானங்கள், ஆற்றல் பானங்கள், மது, சோடா போன்ற ஆரோக்கியமற்ற பானங்கள் உங்கள் இதய ஆரோக்கியத்தை மோசமாக்கும். இந்த வகை உணவில் சர்க்கரையின் அளவு மிக அதிகமாக உள்ளது, இது உங்கள் இதயத்தின் நரம்புகளை பலவீனப்படுத்துகிறது. இது மாரடைப்பு அபாயத்தையும் அதிகரிக்கிறது.

பதப்படுத்தப்பட்ட இறைச்சியை அதிக அளவு உட்கொள்வது இதய ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது உங்கள் வயிறு, இதயம் மற்றும் சிறுநீரகங்களுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே, உங்கள் உணவில் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை சேர்க்க வேண்டாம்.

அதிக உப்பு நிறைந்த உணவை உட்கொள்வதால் உங்கள் இதய நரம்புகள் பலவீனமடைகின்றன. உண்மையில், ஊறுகாய், சூப்கள், சிப்ஸ், பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்கள் ஆகியவற்றின் அதிகப்படியான நுகர்வு இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது, இது இதய ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.