நடிகை கங்கனா ரணாவத் ஹிந்தியில் சமீப காலமாக நடிக்கும் படங்கள் படுதோல்வி அடைந்து வருகின்றன. போட்ட பணத்தில் 10 சதவீதம் கூட திரும்ப வரவில்லை என அவரது படங்களை பற்றிய புள்ளிவிவரங்கள் வருகின்றன.
தமிழில் அவர் ராகவா லாரன்ஸ் உடன் நடித்த சந்தரமுகி 2 படமும் வரவேற்பை பெறவில்லை.
அரசியல்
படங்கள் தொடர்ந்து தோல்வி அடையும் நிலையில் தற்போது கங்கனா அரசியலில் குதிக்க இருக்கிறார். அவர் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் சார்பில் போட்டியிட இருக்கிறார்.
இதை கங்கனாவின் அப்பா உறுதி செய்திருக்கிறார்.