தங்க நிலவரம்

ஆபரண தங்கத்தின் விலை இன்று காலை கணிசமாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று தங்கம் விலை

தமிழகத்தில் சமிபக்காலமாக தங்க விலை குறைந்து வந்த நிலையில் தற்போது அதிகரித்து கொண்டே செல்கின்றது.

அந்த வகையில், சென்னையில் இன்று 22 காரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.40 அதிகரித்து ரூ.46,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த வாரங்களில் 45 ஆயிரத்தை தொட்ட தங்கத்தின் விலை தற்போது சில நாட்களாக கடகடவென அதிகரித்துள்ளது.

ஒரு கிராம் தங்கம்

இதன்படி, ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5,835 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் அடுத்து வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் குறைவதற்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது.

வெள்ளி விலை
வெள்ளியிலும் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அதாவது கிராமுக்கு ரூ.79.50 ஆகவும், கிலோவிற்கு ரூ79,500 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.

தற்போது தங்கத்தின் விலை சற்று அதிகரித்து வந்தாலும் 8 மாதங்களுக்கு முன்பு 43 ஆயிரத்தில் தங்கமும், வெள்ளி 75 ஆயிரமும் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.