பிக்பாஸ் வீட்டிலிருந்து பாதியில் வெளியேற்றப்பட்ட குடும்பத்தினர்

பிக்பாஸ் வீட்டிற்கு வந்த ரவீனா குடும்பத்தினர் பாதியில் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பிக்பாஸ் 7

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி 75 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.

மற்ற சீசன்கள் போல் அல்லாமல் இந்த சீசனில் நாட்கள் மளமளவென 75 நாட்களை கடந்து விட்டது. ஆனாலும் போட்டியாளர்கள் தங்களிடம் உள்ள வன்மத்தை வைத்து நாட்களை கடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அத்துடன் அடிக்கடி போட்டியாளர்கள் ஏதாவது சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறார்கள். இதனால் சமூக வலைத்தளங்களில் பிக்பாஸ் 7 அதிகமாக ட்ரோல் செய்யப்படுகின்றது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பிரீஷ் டாஸ்க் கொடுக்கப்பட்டு போட்டியாளர்களின் நெருங்கிய சொந்தங்கள் வரவழைக்கப்பட்டு வருகின்றனர்.

பாதியில் குடும்பத்தினர் வெளியேற்றம்

அந்த வரிசையில் இன்றைய தினம் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற ரவீனா குடும்பத்தினர் பாதியில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அதாவது வெளியில் நடக்கும் விடயங்களை ரவீனாவின் உறவினர்கள் வீட்டிற்குள் பேசியதாலும் ரவீனாவிற்கு ஏதாவொரு விடயத்தை Code Word கூறிய தெளிவுப்படுத்த முயற்சித்தாலும் அவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பிக்பாஸின் முடிவால் அதிர்ச்சியடைந்த ரவீனா பிக்பாஸை பார்த்து “ தயவு செய்து விடுங்கள்” என கெஞ்சிகிறார். ஆனால் பிக்பாஸின் முடிவு மாறாமல் கதவு திறக்கப்படுகிறது.

மேலும் பிக்பாஸின் இந்த முடிவால் ரவீனா கதறியழுது புலம்புகிறார். இப்படியாக இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.