தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் வெற்றியாளரான பல்லவி பிரசாந்தை பொலிசார் கைது செய்துள்ளனர்.
தெலுங்கு பிக் பாஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது பல மொழிகளில் பல சேனல்களில் நடைபெற்று வருகின்றது. இது ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியாகும். தமிழ் பிக் பாஸ் தற்போது7வது சீசன் நடைபெற்று வருகின்றது.
இதே போன்று தெலுங்கு பிக் பாஸிலும் சீசன் 7 நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுகிழமை பிரம்மாண்டமாக ஃபினாலே நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழில் நடிகர் கமல் ஹாசன் தொகுப்பாளராக இருந்து வரும் நிலையில், தெலுங்கு பிக் பாஸிலும் நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்கியுள்ளார்.
இதில் பல்லவி பிரசாந்திற்கும், அமர்தீப்பிற்கும் கடுமையான போட்டி நடைபெற்ற நிலையில், பிரசாந்த் டைட்டிலை வென்றதுடன், கோப்பை மற்றும் ரூ.35 லட்சம் பரிசுத் தொகையும் பெற்றுள்ளார்.
மேலு் பல்லவி பிரசாந்தின் ரசிகர்கள் அமர்தீப்பின் காரை வழிமறித்து தாக்குதல் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பொலிசார் இதற்கு ஆக்ஷன் எடுததுள்ளனர்.
கைது செய்யப்பட்ட டைட்டில் வின்னர்
அமர்தீப்பின் காரை வழிமறித்து தாக்குதல் மேற்கொண்டது மட்டுமின்றி, அரசு பேருந்துகளின் கண்ணாடியையும் உடைத்துள்ளனர். ரசிகர்கள் செய்த இந்த அடாவடியினால் டைட்டில் வின்னர் பல்லவி பிரசாந்த் தெலுங்கானா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதாவது அமைதிக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பிரசாந்த் நடந்து கொண்டதாக கைது செய்த பொலிசார் அவர் மீது 9 பிரிவுகளில் வழக்கும் பதிவு செய்துள்ளனர்.
ஒரு சாதாரணமான ரியாலிட்டி நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் இவ்வாறு நடந்து கொண்டுள்ளது தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.