நடிகை நஸ்ரியா
நடிகை நஸ்ரியா, அட்லீ இயக்கிய ராஜா ராணி படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட பிரபலம்.
பள்ளி பருவத்தில் இருந்தே படங்களில் நடித்துவரும் நஸ்ரியாவுக்கு நேரம் படம் தமிழில் அறிமுகமாக அமைந்தது.
ராஜா ராணிக்கு பிறகு நையாண்டி, திருமணம் எனும் நிக்கா கிய படங்களில் நடித்தவர் 2014ம் ஆண்டு மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார், அப்போது நஸ்ரியாவுக்கு 19 வயது தான்.
திருமணத்திற்கு பின் சினிமா பக்கம் வராமல் இருந்த நஸ்ரியா 6 ஆண்டுகளுக்கு பிறகு டிரான்ஸ் என்கிற மலையாள படம் மூலம் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளார்.
சொத்து மதிப்பு
தனது இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு படத்துக்கு ரூ. 3 முதல் ரூ. 4 கோடி வரை சம்பளம் வாங்கிவரும் நஸ்ரியாவின் சொத்து மதிப்பு ரூ. 40 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.