நடிகை சுகன்யா
தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய நாயகிகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை சுகன்யா.
புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆன இவர் அப்படத்திற்காக பல விருதுகளையும் வாங்கி இருக்கிறார். பிறகு விஜயகாந்துடன் சின்ன கவுண்டர் திரைப்படத்தில் நடித்து முன்னணி நடிகையாக பிரபலமானார்.
தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்த இவர் டப்பிங் கலைஞராக, இசையமைப்பாளராக, நடன கலைஞராகவும் தனது திறமைகளை காட்டியுள்ளார்.
சின்னத்திரையிலும் சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்தம் சீரியலில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
இவர் 2002ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த ஸ்ரீதர் ராஜகோபால் என்பவரை திருமணம் செய்திருந்தார், ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக ஒரே வருடத்தில் பிரிந்தனர்.
புதிய தொடர்
நடிப்பு பக்கம் அவ்வளவாக தலை காட்டாமல் இருந்து வந்த சுகன்யா இப்போது நடிப்பில் களமிறங்கியுள்ளார். படங்களில் இல்லை சின்னத்திரையில் தான்.
விரைவில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர் ஒன்றில் நடிக்க கமிட்டாகியுள்ளாராம் சுகன்யா. ஆனால் எந்த தொடர், தொலைக்காட்சி பற்றிய விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
View this post on Instagram