தென் பகுதியில் இருந்து கல்முனை பகுதிக்கு வாழைப்பழம் விற்பதற்கு வருகை தந்த சிங்கள பெண்மணியிடம் அத்துமீறி கட்டியணைத்த சந்தேக நபரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவத்தில் அம்பாறை மாவட்டம் கல்முனை பொதுச்சந்தை பகுதியில் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரே பாதிக்கப்பட்டவராவார்.
சந்தேக நபர் கைது
சம்பவ தினமான இன்று(22) முற்பகல் குறித்த பெண் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
இதன்போது 49 வயது மதிக்கத்தக்க மொனராகலை பகுதியை சேர்ந்த சந்தேக நபரே பெண்ணை கட்டியணைக்க முற்பட்டதாக கூறப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட குறித்த பெண் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டிற்கமைய சிறுவர் பெண்கள் பிரிவு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.