ரகுவரன்
மாஸ்-கிளாஸ் என தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி டாப் வில்லனாக வலம் வந்தவர் நடிகர் ரகுவரன்.
சினிமா கல்லூரியில் படித்த ரகுவரன், நடிப்பிற்கு தேவையான நுணுக்கங்கள் அனைத்தையும் கற்றுக்கொண்டு தனக்கான வாய்ப்பை தேடி அலைய ஏழாம் மனிதன் படத்தின் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஆரம்பத்தில் கதாநாயகனாக நடித்து வந்த ரகுவரன் அடுத்தடுத்து படங்களில் வில்லனாக நடித்து கலக்கி வந்தார்.
வில்லன் என்றால் இப்படி தான் இருப்பார்கள் என்று அதுவரை இருந்த தமிழ் சினிமா மக்களின் எண்ணத்தை உடைத்து இப்படியும் இருக்கலாம் என மிரட்டலாக நடித்து காட்டியவர் ரகுவரன்.
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் பல படங்களில் ஒன்றாக நடித்த நடிகர் ரகுவரன், பாட்ஷா படத்தில் மார்க் ஆண்டனியாக நடித்து அனைவரையும் மிரட்டினார். இன்றளவிலும் அந்த கதாபாத்திரத்தை ரகுவரனை தவிர நிச்சயம் யாராலும் நடிக்க முடியாது.
குடும்பம்
இவர் நடிகை ரோகிணியை காதலித்து 1996ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு 1998ம் ஆண்டு ரிஷிவரன் என்ற மகன் பிறந்தார்.
பின் சில காரணங்களால் 2004ம் ஆண்டு ரோகிணி-ரகுவரன் பிரிய, ரிஷி அவரது அம்மாவுடன் வசித்து வந்தார். 2008ம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு ரகுவரன் இறந்தார்.
தற்போது நடிகை ரோகினி தனது மகனுடன் எடுத்த லேட்டஸ்ட் வீடியோவை வெளியிட ரகுவரனை போலவே உள்ளாரே என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
View this post on Instagram