ரஜினியை கட்டிபிடித்துக் கொண்டிருக்கும் பிரபலம் யார் தெரியுமா?

வைரல் புகைப்படம்
திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படம் அவ்வப்போது இணையத்தில் வைரலாவது வழக்கம் தான்.

அந்த வகையில் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினியை கட்டிபிடித்து கொண்டு இருக்கும் பாலிவுட் நட்சத்திரத்தின் சிறு வயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அவர் யார் என கேட்டு ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இவர் தான்
இந்நிலையில் அவர் வேறு யாருமில்லை பாலிவுட் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ஹ்ரித்திக் ரோஷன் தான்.

ஆம், நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் தனது சிறு வயதில் ரஜினியுடன் இணைந்து பகவான் தாதா எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது என்பது குறிப்பிடத்தக்கது.