சலார் படத்தில் நடிக்க பிரபாஸ் -க்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

சலார்
பாகுபலி திரைப்படம் மூலமாக இந்தியா முழுவதும் பிரபலமானவர் தான் நடிகர் பிரபாஸ். தற்போது இவர் நடிப்பில் கே.ஜி.எஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவான சலார் திரைப்படம் நேற்று வெளியானது.

Pan India திரைப்படமாக எடுக்கப்பட்டிருக்கும் சலார் திரைப்படத்தை இந்தியா முழுவதும் ஏராளமான திரையரங்கில் வெளியானது.

இப்படம் முதல் நாள் மட்டுமே ரூபாய் 175 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

சம்பளம்
இந்நிலையில் சலார் படத்திக்காக பிரபாஸ் -க்கு ரூபாய் 100 கோடி வரை சம்பளமாக வாங்கி இருக்கிறாராம். மேலும் இப்படத்தின் மொத்த பட்ஜெட்டே ரூ.400 கோடி தான் என்றும் கூறப்படுகிறது.