கொத்து மற்றும் பிரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுகளின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் உணவுப் பொருட்களின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருட்களின் விலை அதிகரிக்கும்
பொருட்களின் விலை அதிகரிப்பைக் கொண்டே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
சந்தையில் அரிசி, மரக்கறிகள், இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றின் விலை அதிகரிப்பினால் எதிர்வரும் நாட்களில் பிரைட் ரைஸ், கொத்து போன்றவற்றின் விலைகளை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.