தளபதி விஜய்க்கு இப்படி ஒரு ஆசையா!

தளபதி விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் லியோ.

விமர்சன ரீதியாக இப்படம் பின்னடைவை சந்தித்தாலும் கூட வசூலில் மாபெரும் சாதனைகளை படைத்துவிட்டது. லியோ படத்தை தொடர்ந்து தற்போது தளபதி 68 படத்தில் விஜய் நடித்து வருகிறார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. அதில் ஒரு கதாபாத்திரம் வில்லன் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இப்படியொரு ரோலில் நடிக்கவேண்டும்
இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு முன் நடிகர் விஜய் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு வில்லன் கலந்த ஹீரோ கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை என கூறியுள்ளார்.

தன்னுடைய ஆரம்பகால கட்டத்தில் அப்படி நடித்ததாகவும், அப்படிப்பட்ட ரோல் தனது தாய் ஷோபாவிற்கு பிடிக்கவில்லை என்பதால் அதன்பின் அப்படி நடிப்பதை விட்டுவிட்டாராம்.

மேலும் அமைதிப்படை சத்யராஜின் அம்மாவாசை ரோல் போல் பண்ணவேண்டும் என்ற ஆசை தனக்கு இருப்பதாகவும் அந்த பேட்டியில் விஜய் கூறியுள்ளார்.

இதோ அந்த வீடியோ..