தளபதி 68
தளபதி 68 படத்தின் தலைப்பு அதுவாக இருக்குமோ, இல்லை இல்லை இதுவாக இருக்குமோ என கடந்த சில வாரங்களாக பல தலைப்பு இணையத்தில் வைரலாகி வருகிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் முதல் முறையாக நடித்து வரும் தளபதி 68 படத்தின் தலைப்பு First லுக் உடன் வருகிற புத்தாண்டு அன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது.
படத்தின் தலைப்பு
இந்நிலையில் தளபதி 68 படத்தின் தலைப்பு இதுதான் என கூறி செம மாஸ் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, விஜய்யின் தளபதி 68 படத்திற்கு G.O.A.T என தலைப்பு வைத்துள்ளார்களாம்.
G.O.A.T = Greatest Of All Time என்பதே இதன் முழு அர்த்தமாகும். விஜய்யின் 68வது படத்திற்கு G.O.A.T தலைப்பு வைத்துள்ளதை கேள்விக்கப்பட்ட ரசிகர்கள் அனைவரும் தற்போது சமூக வலைத்தளத்தில் G.O.A.T எனும் ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகிறார்கள்.
மேலும் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாக விஜய் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.