லைலாவிடம் அடி வாங்கிய நடிகை ரம்பா

நடிகை ரம்பாவை நடிகை லைலா சில ஆண்டுகளுக்கு முன்பு ரயிலில் சென்று கொண்டிருக்கும் போது அடித்துள்ள சம்பவம் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரயிலில் சண்டை
பொதுவாக தமிழ் சினிமாவில் நடிகர்களுக்குள் தான் அதிகமாக சண்டை வரும். ஆனால் இங்கு நடிகைகள் ஒருவருக்கொருவர் பொறாமை ஏற்பட்டு அது பாரிய பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை ரம்பா மற்றும் லைலா வாழ்விலும் இவ்வாறு நடந்துள்ளது. ரம்பா தான் சினிமாவில் சம்பாதித்த பணத்தை படம் தயாரிப்பதில் போடுவதற்கு முடிவு செய்துள்ளார். இதற்கு பல பிரபலங்கள் வேண்டாம் என்று கூறியும் கேட்காமல் ரம்பா த்ரீ ரோசஸ் என்ற படத்தை தயாரித்துள்ளார்.

இப்படத்தில் ஜோதிகா லைலா நடித்துள்ள நிலையில், இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இப்படத்தின் படப்பிடிப்பு ரயிலில் ஜோதிகா, லைலா, ரம்பா சென்று கொண்டிருந்துள்ளனர்.

அப்பொழுது ரம்பாவும், லைலாவும் ரயில் வாசலில் நின்று கொண்டு வந்த போது லைலா ரம்பாவை தாக்கியுள்ளார். தொடர்ந்து தாக்கிய நிலையில், பின்பு சுற்றி இருந்தவர்கள் இவர்களின் சண்டையை தீர்த்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு பின்பு லைலா எதற்காக அவ்வாறு அடித்தேன் என்பதே தெரியாது என்று கூறி எஸ்கேப் ஆகியுள்ளார்.

தற்போது வெளியான காரணம்
ரம்பா லைலா சண்டை குறித்து செய்யாறு பாலு தற்போது பேசியுள்ள நிலையில், உண்மை அனைவருக்கும் தெரியவந்துள்ளது.

கலைப்புலி எஸ் தானு தயாரிப்பில் உருவாகவிருந்த விஐபி படத்திற்கு முதலில் ரம்பா கதாபாத்திரத்தில் லைலா தான் நடிக்க இருந்தாராம்.

ஆனால் லைலால என்னவாக இருந்தாலும் தயாரிப்பாளர் தன்னை வந்து பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளாராம். ஆனால் இந்த விடயத்தை ரம்பா தனக்கு சாதகமாக்கி அவர் இந்த வாய்ப்பை தட்டிப் பறித்துள்ளார்.

இந்த விடயத்தை லைலாவிடம் சிலர் போட்டுக் கொடுத்த நிலையில், அந்த கோபத்தை தான் அன்று ரயிலில் காட்டியுள்ளார் என்று உண்மையை உடைத்துள்ளார்.