பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் சரவண விக்ரம் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது 82 நாட்களை கடந்து செல்கின்றது.
இந்நிகழ்ச்சியிலிருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா, ப்ராவோ, அக்ஷயா, ஜோவிகா, கூல் சுரேஷ் என 13 பேர் வெளியேறியுள்ளனர்.
தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 10 போட்டியாளர்கள் இருக்கின்றனர்.
இந்த வாரம் எலிமினேஷனில் ரவீனா, விசித்ரா, விக்ரம் ஆகியோர் உள்ள நிலையில் சரவண விக்ரம் தற்போது வெளியேறியுள்ளாராம்.
அதுமட்டுமில்லாமல் இந்த வாரம் இரண்டு நாமினேஷனாக இருக்குமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ஆனால் இந்த கேள்விக்கு இன்று இரவு கட்டாயம் பதில் தெரிந்துவிடும் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.